இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன்
🔷 இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் புகழ்பெற்றவர்.
🔷 இவர் சிறிய வயதிலேயே மன்னராக்கப்படுகிறார்.
🔷 இதனால் இவரை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று எண்ணி,
🔵 சேர மன்னன் - மாந்தரஞ்சேரல் இரும்பொறை
🔵 சோழ மன்னன் - பெருநற்கிள்ளி
ஐந்து குறுநில மன்னர்கள் :
🔵 திதியன்
🔵 எழினி
🔵 எருமையூரன்
🔵 இருங்கோவேண்மான்
🔵 பொருநன்
ஆகியோர் ஒன்றிணைந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தனர்.
🔷 இவர்களுக்கும் பாண்டிய மன்னனுக்கும் தலையாலங்கானம் என்ற இடத்தில் போர் நடைபெற்றது.
🔷 இப்போரின் முடிவில் இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன் வெற்றியடைந்தார்.
🔷 இதனால் இவருக்கு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது.
🔷 இப்போரைப் பற்றி புறநானூறு, அகநானூறு, நற்றினை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
_____ ✨ _____ 🌟 _____ ✨ _____
FOLLOW :
⚫ YOUTUBE CHANNEL : https://youtube.com/@user-xy1qt3dr6w?si=mVVSwOTTGWScXz5l
⚫ இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன் : https://youtu.be/EJrfLMdex8M?si=wrvQYVyTa8p_Bqyh